எமது நோக்கு

நல்லாட்சின் ஊடாக​ சிறந்த​ பிரதேச செயலகம் என்ற நிலையை அடைதல்.

எமது கொள்கை

அரச கொள்கைகளுக்கு ஏற்ப சேவை வழங்குதலும் வளங்களை ஒருங்கினைத்து மக்களின் பங்களிப்புடன், ஒழுஙகான திட்டமிடலுடன் கூடிய அபிவிருத்தி நடவடிக்கையின்,மூலம் பிரதேச மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துதல்.

இலங்கையின் மத்திய மாகாணத்தின் பிரதான மாவட்டமாக இருக்கும் கண்டி மாவட்டத்தின் 20 பிரதேச செயலகங்களில் விஷேட சிறப்பம்சங்களைக் கொண்ட பிரதேச செயலகமாக குண்டசலை பிரதேச செயலகம் திகழ்கிறது. 
குண்டசலை பிரதேச செயலகத்தின் எல்லைகளாவன;
வடக்கில் -பன்வில பிரதேச செயலகம்
கிழக்க்கில்-மெததும்பர பிரதேச செயலகம்
தெற்கில் -கங்கவடகோரளை பிரதேச செயலகம்
மேற்கில் - பாததும்பர பிரதேச பிரதேச செயலகம்
 
இந்த பிரிவில் 85.8 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு மற்றும் நிர்வாகத்தின் வசதிக்காக 80 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த கிராம சேவகர் பிரிவுகளில் 263 கிராமங்கள் உள்ளன.
 
2017 ஆம் ஆண்டில், மக்கள் தொகை 140,299 ஆகும், ஆண்கள் 67989 தொகை மற்றும் பெண்கள் தொகை 72310 ஆகும். குண்டசலை புறநகர் பகுதியானது நகரிலிருந்து 16 கி.மீ குறுகிய தொலைவில் இருப்பதே இப்பிரதேசத்தில் மக்கள் தொகை அதிகளவில் வாழ்வதற்கு காரணமாகும்.இதற்கு மேலதிகமாக பல்லேகல  கைத்தொழில் பேட்டை, பிரதான செயலகம், சர்வதேச கிரிக்கெட் அரங்கம், சர்வதேச பௌத்த மையம், இலங்கை பொலிஸ் வைத்தியசாலை, மாகாண ஆயுர்வேத வைத்தியசாலை போன்றவை  அமைந்திருத்தல் முக்கிய காரணமாகும். இதனால் சாலைகள், குடிநீர், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் போன்ற  உட்கட்டமைப்புகள்  அபிவிருத்தி அடைந்துள்ளன.
 
சராசரியான வருடாந்த மழைப்பொழிவு 21.25 மி.மீ மற்றும் சராசரியான ஆண்டு வெப்பநிலை 25.25 - 27 டிகிரி செல்சியஸ் ஆகும். கலாமுதுவ ராஜமஹா விஹாரை, தெபலோதொருவ ராஜமஹா விஹாரை மற்றும் குண்டசாலை ராஜமஹா விஹாரை போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இங்கு காணப்படுகின்றன. நைஸ்டேல் நீர்வீழ்ச்சி, நாரம்பனாவ நீச்சல் குளம் ஆகியவை பார்வையிடும் சுற்றுச்சூழல் அழகியல் நிலையங்களாக கருதப்படுகின்றன.
 
டோலோமைட் மற்றும் கிரானைட் போன்றவை இயற்கை வளங்களாக காணப்படுகின்றன,அதேவேளை பித்தளை மற்றும் மரத்தாலான செதுக்கல்கள் பாரம்பரிய கலைகளாக காணப்படுகிறது .பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி,மத அபிவிருத்தி மற்றும் சமூக நலன்புரி வசதிகளை அபிவிருத்தி செய்தல் முதன்மையாகன அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆகும். 
இப்பிரதேசத்தில் 39 பாடசாலைகள் காணப்படுகின்றன.இதில் 30 சிங்கள மொழி பாடசாலைகள் மற்றும் 07 தமிழ்மொழி  பாடசாலைகள். இவற்றில் 02 தேசிய பள்ளிகள், 1 மத்திய கல்லூரி, 15 மகா வித்தியாலங்கள், 13 இளைய பள்ளிகள், 04 ஆரம்ப பள்ளிகள் மற்றும் 02 சர்வதேச பாடசாலைகள் உள்ளன. அத்துடன் ஒரு தேசிய கல்வியியல் கல்லூரியும் ஒரு போலீஸ் பயிற்சி கல்லூரியும் காணப்படுகிறது. 
 
இன்று, நகரமயமாக்கப்பட்ட இப்பகுதியில் பல முக்கிய சர்வதேச தளங்கள் அமைந்துள்ளன. பல்லேகெலே சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் சர்வதேச பௌத்த மையம் இவற்றில் முதன்மையானவை. பல்லேகெல் ஆயுர்வேத வைத்தியசாலை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தேசிய பொருளாதாரத்தில் பல்லேகலை தொழில்துறை பேட்டை முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.    
 

குடியுரிமை சாசனம்

Scroll To Top